Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவிற்கு இராணுவ எலிகாப்டர் கொடுத்தது அமெரிக்கா...!! சீனாவையும், பாக் கையும் தடம் தெரியாமல் அழிக்க திட்டம்..!!

மறைவிடங்களில் பதுங்கியுள்ள எதிரிகளை  தன் ரேடார்கள் மூலம் எளிதில் கண்டு பிடித்து அவர்களின் மீது துள்ளியமாக தாக்குதல் நடத்தும் ஆற்றல்கொண்டவைகள் அப்பாச்சி எலிகாப்டர்கள் என்று விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். 

america provided apache war helicopter to india
Author
Delhi, First Published Sep 3, 2019, 12:15 PM IST

இந்தியாவிடம் பாகிஸ்தான் ஜம்பம் காட்டிவரும் நிலையில் இந்தியா விமானப்படையில் அமெரிக்க தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அப்பாச் என்ற அதிதொழில் நுட்ப இராணுவ எலிகாப்டர்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளது. america provided apache war helicopter to india

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து இந்தியாவை பாகிஸ்தான் மிரட்டிவருகிறது, சீனாவுப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதுடன்,  அடிக்கடி எல்லையில் அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் தன் ராணுவ பலத்தை கூட்டும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து ரேபல் மற்றும் மிக் ரக போர் விமானங்களை இறக்குமதி செய்து விமானப்படையை உறுதிபடுத்தி வருகிறது.  தற்போது முதல்முறையாக அமெரிக்காவிடமிருந்து பிரத்யேகமாக  அப்பாச் என்ற பல்திறன் தாக்குதல் தொழில்நுட்பம் கொண்ட  இராணுவ எலிகாப்டர்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. america provided apache war helicopter to india 

இந்திய விமானப்படையை வலுபடுத்தும் நோக்கில் அமெரிக்காவிடமிருந்து அப்பாச் என்ற  போர் எலிகாப்டர்களை வாங்க முடிவு செய்து கடந்த  2016 ஆம் ஆண்டு சுமார் 4,168 கோடி ரூபாய்க்கு இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.  அதன் அடிப்படையில்  நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில் முதற்கட்டமாக 8 அப்பாச் போர் எலிகாப்டர்களை இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது .  இந்த எலிகாப்டர்கள் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் இன்று இந்தியா வாமானப்படையில் விமானப்படை தளபதி தனோவா முன்னிலையில் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தன் இராணுவ எலிகாப்டர்களை மற்ற  நாடுகளுக்கும் அமெரிக்க அவ்வகளு எளிதாக வழங்குவதில்லை,  தங்களுடைய நட்பு நாடுகளுக்கு மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது அது இந்தியாவிற்கும் எலிகாப்டர்களை வழங்கியுள்ளது. 

america provided apache war helicopter to india

இது சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானங்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விமானப்படை தளபதி தனோவா,  புதிய தொழில்நுட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அப்பாச்சி எலிகாப்டர்கள், இந்திய எல்லையில் போர் காலத்தில் அதிவேகமான செயல்படுவதற்கு பயன்படுத்தப்படும் என்றும், மறைவிடங்களில் பதுங்கியுள்ள எதிரிகளை  தன் ரேடார்கள் மூலம் எளிதில் கண்டு பிடித்து அவர்களின் மீது துள்ளியமாக தாக்குதல் நடத்தும் ஆற்றல்கொண்டவைகள் அப்பாச்சி எலிகாப்டர்கள் என்று விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். குறுகலான மலைச்சிகரங்களுக்கு இடையில் சென்றுவரும் வகையில் அப்பாச் எலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே எல்லையில் எதிரிநாட்டு படைகளுக்கு அப்பாச் எல்காப்டர்கள்  சிம்மசொப்பனமாக அமையும் என்று தனோவா கூறினார். மேலும்   கூடுதலாக 12 அப்பாச் எலிகாப்டர்கள் படையில் சேர்க்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios