Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்கா எப்போதும் இந்தியாவுடன் நிற்கும்.. மருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்தது அமெரிக்க போர் விமானம் .

அமெரிக்காவில் இருந்து கொரோனா நிவாரணம் முதல் தொகுப்பு இந்தியா வந்தடைந்துள்ளது. இது வெறும் முதல் தொகுப்பு மட்டும்தான், ஒரிரு நாட்களில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க மக்கள் நன்கொடை அளிக்கும் உபகரணங்களுடன் இந்தியாவுக்கு வரும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.v

America always with india.  American warplane came to India with medical equipment.
Author
Chennai, First Published Apr 30, 2021, 11:44 AM IST

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் முதற்கட்ட நிவாரண தொகுப்பு வந்து சேர்ந்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ விமானம் நேற்று அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்தடைந்துள்ளது. கொரோனா முதல் அலையின் போது, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்தது. இந்தியாவின் அச் சேவையை ஐ.நா சபையும் வெகுவாக பாராட்டியது. ஆனால் தற்போது  இரண்டாவது அலையால் இந்தியா மிகக் கடுமையாக பாதித்து வருகிறது. தினந்தோறும் கிட்டத்தட்ட 3. 60  இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். கையறுநிலையில் இந்தியா இருந்து வருகிறது. 

America always with india.  American warplane came to India with medical equipment.

கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு உதவ பல்வேறு உலக நாடுகள் முன் வந்துள்ளன. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் செயற்கை நுரையீரல் காற்றோட்டத்துடன் கூடிய எந்திரங்கள் இன்னும் பிற தேவையான மருத்துவ பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முன்வந்துள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் 400 ரக போர் விமானம் 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் சுமார் ஒரு மில்லியன் கொரோனா சோதனை கருவிகள் மற்றும் பிற உபகரணங்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டரில், 70 ஆண்டுகால நட்பின் தொடர்ச்சியாக அமெரிக்கா எப்போதும் இந்தியாவுடன் இருந்து வருகிறது. கொரோனா நெருக்கடியில் கூட நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்  #USIndia Dosti என எழுதப்பட்டுள்ளது. 

America always with india.  American warplane came to India with medical equipment.

அமெரிக்காவில் இருந்து கொரோனா நிவாரணம் முதல் தொகுப்பு இந்தியா வந்தடைந்துள்ளது. இது வெறும் முதல் தொகுப்பு மட்டும்தான், ஒரிரு நாட்களில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க மக்கள் நன்கொடை அளிக்கும் உபகரணங்களுடன் இந்தியாவுக்கு வரும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக கூறுகையில், கொரோனா ஆரம்ப நாட்களில் அமெரிக்க மருத்துவமனையில் ஏற்பட்ட அழுத்தத்தைத் தணிக்க இந்தியா அமெரிக்காவிற்கு முன்வந்து உதவியது போல, தற்போது இந்தியாவுக்குத் தேவைப்படும் இந்நேரத்தில் இப்போது நாங்கள் இந்தியாவுடன் இருக்கிறோம். என கூறியுள்ளார்.

America always with india.  American warplane came to India with medical equipment.

அதேபோல் ஒரிரு நாட்களில் 100 மில்லியன் டாலர் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios