Asianet News TamilAsianet News Tamil

சிஏஏ, என்ஆர்சி-யால் இந்துக்களுக்கும் பாதிப்பு... மோடியை வெளுத்துவாங்கிய அம்பேத்கர் பேரன்!

“குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, 40 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள். மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை எழுப்பிவருகிறது.நவி மும்பை பகுதியில் உள்ள தடுப்பு முகாமில் மட்டும் 1.5 லட்சம் பேரும், கார்கர் தடுப்பு முகாமில் 5 லட்சம் பேரையும் அடைக்க முடியும்."

Ambedkar Grand son slam modi government on CAA and NRC
Author
Aurangabad, First Published Dec 29, 2019, 10:17 PM IST

குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். Ambedkar Grand son slam modi government on CAA and NRC
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், இஸ்லாமியர்கள் உள்பட பல தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அவுரங்காபாத்தில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஏராளமான பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற அம்பேத்கரின் பேரனும் வஞ்சித் பகுஜன் அகாடி தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் சிறப்புரையாற்றினார்.

Ambedkar Grand son slam modi government on CAA and NRC
“குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, 40 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள். மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை எழுப்பிவருகிறது.நவி மும்பை பகுதியில் உள்ள தடுப்பு முகாமில் மட்டும் 1.5 லட்சம் பேரும், கார்கர் தடுப்பு முகாமில் 5 லட்சம் பேரையும் அடைக்க முடியும். இந்த பிரச்னைகளை மறைக்கவே என்.ஆர்.சி.யை அமல்படுத்தமாட்டோம் என்று மோடி அரசு கூறிவருகிறது. ஆனால், இன்னொரு புறம் இதுபோன்ற முகாம்களை திறந்துகொண்டும் இருக்கிறது. இந்த முகாம்களுக்கு இப்போது எங்கிருந்து தேவை வந்தது? என்று பிரகாஷ் அம்பேத்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios