Asianet News TamilAsianet News Tamil

எப்பவும் இதே வேலையைப் பண்றீங்களே.. பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமான விழுப்புரம் நிர்வாகிகள்.!

அதிமுக கூட்டணியை விட்டு பாமக வெளியேறியதால், அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளனர். 
 

Always do the same job .. Stay away from PMK and joined Villupuram functionaries in AIADMK.!
Author
Tindivanam, First Published Sep 23, 2021, 7:53 AM IST

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும் முடிந்துவிட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட பாமக நிவாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளனர். பாமக மாநில துணைத் தலைவர் ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் மலர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், நகர வன்னியர் சங்கத் தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.Always do the same job .. Stay away from PMK and joined Villupuram functionaries in AIADMK.!
தாங்கள் அதிமுகவில் சேந்தது பற்றி ஏழுமலை கூறுகையில், “1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கிய நாளிலிருந்து டாக்டர் ராமதாஸுடன் இணைந்து பணி செய்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது, கூட்டணியை விட்டு பாமக வெளியே வந்துவிடும். எம்எல்ஏ, எம்பி தேர்தலில் மட்டும் கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியே வந்தது எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை.” என்று தெர்வித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios