குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவது மிக முக்கியமன திட்டம். குடும்ப தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவி வழங்கப்படும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. 

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவது மிக முக்கியமன திட்டம். குடும்ப தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவி வழங்கப்படும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இல்லத்தரசிகளுக்கு உதவி வழங்குவதே நோக்கம். குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை. ரூ.4ஆயிரம் நிதியுதவியை அரசு ஊழியர்கள், பணக்காரர்களுக்கு வழங்கக்கூடாது என விமர்சனம் எழுந்தது. ஏழை மக்களுக்கு அடிப்படை உரிமை தொகை செல்வதை உறுதி செய்யவே அளவுகோள் வகுக்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பின்னரே ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறினார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதேபோல் பல தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.