நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என  தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்   


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர்  ரவீந்திரநாத் குமார்

நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றாலும் கூட தமிழக அரசின் குரலாக இருந்து நாடாளுமன்றத்தில் ஒலித்து வருகிறார்

ரவீந்திரநாத்தின்  குரல் ஆதிமுகனுடைய குரலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ரவீந்திரநாத் குமார் ஆதரவளித்தும் வரவேற்றும் பேசி வருகிறார். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த காஷ்மீருக்கான  சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப் பட்டதற்கு ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்ததுடன் , மத்திய அரசை பாராட்டி பேசினார்.

இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கொண்டு வருகின்ற  சட்ட திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் என்றும், தமிழக அரசின் குரலாக  நாடாளுமன்றத்தில் தன் குரல் ஒலிக்கும் என்றும் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்