இந்தியா மட்டுமின்றி வேறு நாடுகளிலும் பிரதமர் மோடியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் மோடியின் ஆதரவாளர்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தது. அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் இந்த தேர்தல் முடிவுகளை உலக நாடுகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில், ஆரம்பம் முதலே மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வந்தது.

காங்கிரஸ் 100 இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. தற்போது மாலை நேர நிலவரப்படி, 300க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. இதனால் உலகமெங்கும் உள்ள மோடியின் ஆதரவாளர்கள் காவி உடை அணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக உள்ளனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மோடி ஆதரவாளர்களும் துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோடியின் ஆதரவாளர்கள் காவி நிறத்தில் ஸ்கார்ப் அணிந்து கொண்டும் காவி நிறத்தில் ஆடை அணிந்தும் உற்சாகமாக அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.