முக.அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்க பேவாதாக செய்தி வெளியாகி இருப்பது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் முக. அழகிரி முக்கியத்துவம் பெருகிறார். தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக செய்திகள் உலாவருவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முக.அழகிரி தென்மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தேர்தல் நேரத்தில் பம்பரம் போல் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் திடீரென்று தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் ஆஜராகி நிர்வாகிகளை சந்திப்பார். அதே நேரத்தில் பண விசயத்தில் யாரும் ஏமாற்ற முடியாது. அந்த அளவிற்கு அவர் நிர்வாகம் இருந்தது. பணத்தை ஏமாற்றிய கட்சி நிர்வாகிகள் என்ன பாடு பட்டார்கள் என்பதெல்லாம் வரலாறாக இருக்கிறது.


திமுக ஆட்சிக்காலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது இவருக்கு இடைத்தேர்தல் நாயகன் என்கிற பட்டம் கிடைக்க. காரணமான தொகுதி திருமங்கலம். இந்த தேர்தல் தான் உலகம் முழுவதும் முக.அழகிரியை டாப்லெவலுக்கு கொண்டு சென்றது.அதன் பிறகு நடந்த ஆட்சிமாற்றம் போஸ்டர் யுத்தம் குடும்பசண்டையால் பல்வேறு சிக்கல்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. தன் விசுவாசிகள் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். எனக்கு பதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என் மகன் துரைக்கு இளைஞர் அணியில் பதவி கேட்டார் அதுவும் கிடைக்கவில்லை. திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல.என்று பொங்கினார் அழகிரி. கடந்த சட்டமன்றதேர்தல் திமுக தோல்வியை சந்திக்கும் என்றார் அழகிரி அதுபோலவே தேர்தல் ரிசல்ட் இருந்தது.

 திமுகவை உடைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.அதை அழகிரியை வைத்தே பாஜக செய்யும் என்று ஸ்டாலின் அஞ்சுகிறார்.தமிழகத்தில் திமுகவில் அதிருப்தி சீனியர்கள் கட்சிக்குள் இருக்கிறார்கள் . அவர்களை சரிசெய்யவில்லை என்றால் அதிப்தியினர் அழகிரி பக்கம் சாய தயாராக இருக்கிறார்கள்.

 திமுக எம்எல்ஏக்கள் மட்டும் எம்பிக்களை இழுப்பதில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ குக செல்வம்,  கிட்டத்தட்ட பாஜகவில் இணைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் ஒருசில எம்எல்ஏக்களும் பாஜகவில் சேர்வதற்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் திமுக தலைமை அதிர்ச்சியில் இருக்கிறது.விபி.துரைச்சாமி பாஜகவில் இணைந்ததை அடுத்து அடுத்தடுத்த விக்கெட்கள் காலியாகிக்கொண்டிக்கிறது.
இந்த நிலையில் திடீரென முக அழகிரி தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் அதற்கு’கலைஞர் திமுக’ என்று பெயர் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. புதிதாக ஆரம்பிக்க இருக்கும் அவரது கட்சியில் திமுகவில் அதிருப்தியில் உள்ள சீனியர் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆளும் கட்சியான அதிமுகவை வரும் தேர்தலில் சமாளிக்கவே திமுக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேரத்தில் திடீரென முக அழகிரி தரப்பிலிருந்தும் சிக்கல்கள் வரலாம் என திமுக கருதி வருகிறது.
தனிக்கட்சியை ஆரம்பிக்க இதுதான் சரியான சமயம் என முக அழகிரி ஆதரவாளர்கள் அவருக்கு ஆலோசனை கூறி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் விரைவில் ’கலைஞர் திமுக’ என்ற கட்சியை உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முக அழகிரி தனிக் கட்சி ஆரம்பித்தால் தென்மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.