ஒரு லட்சம் பேரை வைத்து கெத்து காட்டுவேன் என தனது தம்பிக்கு எதிராக தொடைத்தட்டி களத்தில் குதித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சருமான கருணாநிதி மகனுமான மு.க.அழகிரி. தன்னை திமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக்கொண்டால் மட்டும் போதும் என கெஞ்சி கூத்தாடி பார்த்துவிட்டார். ஆனால் ஸ்டாலின் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு கிரீன் சிக்னலும் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து ஏற்கனவே திட்டமிட்டப்படி நாளை 5-ம் தேதி சென்னையில் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.  வெளியூரில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்படும் வாகனங்கள் நிறுத்தம் இடங்களை கண்டறிந்து அதை பார்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும் பேரணி ஆரம்பிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அண்ணா சமாதி வரை கொடிகள் தோரணங்கள் மற்றும் ப்ளக்ஸ்கள் என ஆயிரக்கணக்கில் வைத்து ஆதகளப்படுத்த அழகிரி அணியினர் ஈடுட்டுள்ளனர். அதேபோல் கருணாநிதி சமாதியில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து விலை உயர்ந்த பூக்கள் விமானத்தில் வரவழைக்கப்பட்டுள்ளது. 

நாளை நடைபெறும் பேரணியில் கருணாநிதி படத்திற்கு அணிவிக்க பிரம்மாண்டமான மாலை வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மாலை ஏசி ரூமில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழகிரி ஸ்டாலினை மிரட்டுவதற்காக இது போன்ற பேரணியில் ஈடுபட்டுள்ளார். அழகிரிக்கு இந்த பேரணி கைக்கொடுக்குமாக என நாளை மாலை தெரியும்.