திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் மதுரையில் மு.க.அழகிரியின் இல்லம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் மதுரையில் மு.க.அழகிரியின் இல்லம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த மு.க.அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் செய்தியாளர்களை விரட்டி அடித்தனர்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவின் தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மு.க.அழகிரி செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் அமைதி பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். 
இதனிடையே நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார். எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை, போதிய ஆட்கள் வராததால்தான் தனது திருமண மண்டபத்தில் நடத்தவிருந்த ஆலோசனை கூட்டத்தை கூட வீட்டிலேயே அழகிரி நடத்தினார். இதனால் மதுரையில் உள்ள அழகிரியின் இல்லத்தில் தொண்டர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. 
குறைந்த அளவு ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தும் புகைப்படத்துடன் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன் காரணமாக அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை ஆவேசமாக விரட்டியடித்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
