வழக்கம்போலவே இந்தமுறையும் தனது ஜனநாயக கடமையை முதல் ஆளாக வந்து ஆற்றிவிட்டுப் போனார் அஜித். ஆனால், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமாக உள்ளனர். 

அஜித் காலை 7 மணிக்கே தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். அஜித்தின் தொகுதி தென்சென்னைக்கு உட்பட்டது. தென்சென்னை மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், அதிமுக வேட்பாளராக அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தனும், அமமுக வேட்பாளராக இசக்கி சுப்பையாவும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் இவர்களில் அஜித் யாருக்கு வாக்களித்திருப்பார் என்கிற பட்டிமன்றமே நடந்து வருகிறது. அஜித்துக்கு எப்போதுமே ஜெயலலிதா மீது பெரிய மரியாயதை, அன்பு உண்டு. அதேபோல் ஜெயலலிதாவும் அஜித் மீது பெரிய மாசம் வைத்திருந்தார். அஜித்தின் திருமணத்திற்கு சென்ற ஜெயலலிதா அன்றைய நாளின் பெரும்பகுதியை அங்கே சந்தோஷமாக இருந்து கவனித்தார். இதை முழுமையாக உணர்ந்து வைத்திருந்த அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அஜித் சொல்லாமலேயே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்களித்து வந்தனர். கிட்டத்தட்ட அஜித்தும் அதிமுகவுக்கு வாக்களிப்பவர் என்கிற தகவலும் வெளியானது. ஆனால் இதுகுறித்து அஜித் வெளிப்படையாக பேசியதில்லை. 

2010ம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா எடுத்த போது, அனைவரும் கருணாநிதியை இந்திரனே... சந்திரனே... என பாராட்டிக்  கொண்டிருக்க, ‘’எங்களை விருப்பமில்லாமல் விழாக்களுக்கு வரச்சொல்லி மிரட்டுகிறார்கள் ஐயா’’ என மேடையிலேயே போட்டுடைத்தார் அஜித். அது கருணாநிதி தரப்பை கொதிப்படையச் செய்தது. திமுகவினர் அஜித் மீது பேரதிருப்திக்கு ஆளாகினர். அப்போது முதல் அஜித் திமுகவுக்கு எதிரானவர் என சித்தரிக்கப்பட்டார். 

இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவும் உயிருடன் இல்லை. கருணாநிதியும் காலமாகி விட்டார். அதிமுக - அமமுக என இரண்டாக உடைந்து களமிறங்குகிறது. களத்தில் சினிமாவை சேர்ந்த கமல்- சீமான் ஆகியோரும் குதித்துள்ளனர். தேர்தலுக்கு முன் சீமாந் கமலை தவிர அத்தனை கட்சிகளும் அஜித் தங்கள் பக்கமே எனக் காட்டிக் கொள்ள ஆர்வம் காட்டின. 

கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரனிடம் ஒரு தொண்டர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்டு கொண்டபோது, அஜித் எனப் பெயர் சூட்டி தன் கட்சிக்கு ஆதரவை திரட்ட எண்ணினார். அஜித் ரசிகர்களின் லட்சக்கணக்கான வாக்குகள் அடங்கிய அந்த ‘அஜித் ஓட்டு வங்கி’ தங்களைத்தான் வந்து சேரும் என்று கனவில் இருந்தது அதிமுக. அதனை விஸ்வாசம் படம் வெளியாகும் போது அமைச்சர்கள் அஜித் தங்கள் வீட்டுப்பிள்ளை எனக் காட்டிக் கொண்டனர். 

விஸ்வாசம் படத்தின் சக்ஸஸ்காக ஆளுங்கட்சி நிறைய  உதவிகளை அஜித்துக்கு செஞ்சு கொடுத்ததா ரஜினியும், கலாநிதியும், ஸ்டாலினும், உதயநிதியும் நம்பினார்கள். விஸ்வாசம் பரபரப்பு சமயத்தில், அஜித்தை தங்கள் கட்சி பக்கம் இழுக்குற மாதிரி ஒரு ஸ்டண்டை போட்டார் தமிழிசை. உடனே சூடாக பதில் தந்த அஜித் அந்த ஆஃபரை மறுத்தார். விஸ்வாசம் - பேட்ட எதிர்ப்பும் திமுக குடும்பத்திலிருக்கும் கலாநிதி மாறன் மீது அஜித்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 

ரஜினி மீது உள்ள பற்று கமல்ஹாசன் மீது அஜித்துக்கு இருந்ததே இல்லை. கமலையே இப்படி மதிப்பவர் சீமானை கிஞ்சித்தும் பார்க்க மாட்டார். ஆக, தனது வாக்கை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியக்கு செலுத்தினாரா? அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனுக்கு வாக்களித்தாரா? அல்லது குழந்தைக்கு தனது பெயரை சூட்டின் விஸ்வாசத்தை வெளிப்படுத்திய டி.டி.வி.தினகரன் வேட்பாளரான இசக்கி சுப்பையாவுக்கு  அழுத்தினாரா? இல்லை சீமானுக்கோ கமல் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தாரா? இல்லை அவரது சாய் நோட்டாவுக்கா என்பது அஜித் வெளியில் சொல்லாமல் யாருக்கு வாக்களித்தார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது.