Asianet News TamilAsianet News Tamil

அஜித் ரசிகர்களின் தாறுமாறான அரசியல் முடிவு...! நினைத்தே பார்க்காத அதிர்ச்சியில் அ.தி.மு.க...! தேர்தலை தெறிக்கவிடும் தல டீம்..!

அஜித்துக்கு எப்போதுமே ஜெயலலிதா மீது பெரிய மரியாயதை, அன்பு உண்டு. அதேபோல் ஜெ.,வும் அஜித் மீது பெரிய மாசம் வைத்திருந்தார் தன் பிள்ளை போல். இதை முழுமையாக உணர்ந்து வைத்திருந்த அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அஜித் சொல்லாமலேயே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்களித்து வந்தனர். இது அஜித்துக்கும் நன்றாகவே தெரியும்.

Ajith fans political decision ...!
Author
Tamil Nadu, First Published Apr 12, 2019, 2:31 PM IST

கட்சி துவங்கிவில்லை என்றாலும் கூட ரஜினி சொன்ன ஒற்றை வார்த்தையை வைத்து அரசியலில் அதிர்வலைகள் உருவாகின்றன, கட்சி துவங்கி தன் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் நிற்கும் கமலால் எந்த சலனமுமில்லை, அரசியல் ஆர்வம் அதிகமாய் இருந்தாலும் கூட அது இல்லாதது போலவே சீன் போடும் விஜய்யும் ‘கொடி, மன்ற பெயர், என் பெயரை பயன்படுத்தாதீர்’ என்று வைபரேஷனுக்குள் வரத் துடிக்கிறார். 

ஆனால் இந்த அலும்பல்கள் எதிலுமே சிக்கிக் கொள்ளும் விருப்பமின்றி, தள்ளி, தனியே நின்றாலும் கூட தல அஜித்தைதான் அத்தனை அரசியல் கட்சிகளும் கடவுளாய் நம்பி இருப்பதென்பது எவ்வளவு பெரிய கெத்து. ஆம், அது உண்மையும் கூட. தல ரசிகர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்கின்றன தமிழகத்தின் அத்தனை கூட்டணி கட்சிகளும். Ajith fans political decision ...!

அஜித்துக்கு எப்போதுமே ஜெயலலிதா மீது பெரிய மரியாயதை, அன்பு உண்டு. அதேபோல் ஜெ.,வும் அஜித் மீது பெரிய மாசம் வைத்திருந்தார் தன் பிள்ளை போல். இதை முழுமையாக உணர்ந்து வைத்திருந்த அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அஜித் சொல்லாமலேயே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்களித்து வந்தனர். இது அஜித்துக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அவர்  தடுத்ததும் இல்லை, தட்டிக் கொடுத்ததும் இல்லை. அதேபோல் ஜெ.,வுக்கு இது தெரிந்தும் கூட அதை வரவேற்று வெளிப்படையாக பேசியதில்லை. Ajith fans political decision ...!

இந்த நிலையில், ஜெயலலிதா மறைந்து அ.தி.மு.க. ஒரு மாபெரும் தேர்தலை சந்திக்கிறது. வழக்கம்போல் அஜித் ரசிகர்களின் லட்சக்கணக்கான வாக்குகள் அடங்கிய அந்த ‘தல ஓட்டு வங்கி’ தங்களைத்தான் வந்து சேரும் என்று கனவில் இருந்துவிட்டது அ.தி.மு.க. தரப்பு. ஆனால் லேட்டஸ்டாக உளவுத்துறை ஸ்மெல் செய்து கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்த ஆளும் தலைமை அரண்டு போனது. காரணம்?...’அஜித் வாக்கு வங்கியில் கிட்டத்தட்ட பாதியை தி.மு.க. தன் பக்கம் இழுத்திருக்கிறது.’ என்பதுதான். 

எப்படி? என்றால்....தேர்தல் வைபரேஷன் துவங்கியதுமே அஜித்தின் ரசிகர் மன்ற முக்கிய தலைகளை (தனது மன்றத்தை என்னதான் அஜித் கலைத்துவிட்டாலும் கூட, தானாக சேந்து சில தலைமையின் கீழ் ரசிகர்கள் இயங்குகிறார்கள்.) சந்தித்த அந்தந்த ஏரியா தி.மு.க. முக்கிய புள்ளிகள், ‘ஒவ்வொரு தடவையும் அ.தி.மு.க.வுக்குதான் ஓட்டு போடுறீங்க. அது உங்க தல மேலே அம்மா வெச்சிருந்த பாசத்துக்கான நன்றி. ஆனா இப்ப அம்மாவே இல்லை. இப்ப இருக்கிற எடப்பாடியார், ஓ.பி.எஸ். எல்லாம் உங்க தலயை மதிக்கிறாங்களா, இல்ல ஒரு பெருமை கொடுத்து பேசுறாங்களா? உங்க தலைவர் அஜித்துக்கு பிடிச்சது உழைப்பு, அதைத்தானே ஆயிரம் மடங்கு பண்ணிட்டிருக்கார் எங்க தலைவர் ஸ்டாலின். இந்தவாட்டி அவருக்கு வாக்கு கொடுங்க பாஸ், நிச்சயம் மாநிலம் நல்லா இருக்கும். Ajith fans political decision ...!

மக்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவர் தல. அது எங்களுக்கு நல்லாவே தெரியும். அந்த அடிப்படையிலதான் கேட்கிறோம். ப்ளீஸ், ஒரு வாய்ப்பு கொடுங்க.’ என்று பேசிப் பேசியே கனிய வைத்துள்ளனர். இதில், அஜித் தரப்பில் கிட்டத்தட்ட பாதி ரசிகர்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் முடிவுக்கு வந்துவிட்டனர். பாதி பேர் மட்டும், ‘அம்மா இல்லாட்டி என்ன? தல யோட மனசுக்கு பிடிச்ச அரசியல்வாதி அம்மாதான். அந்த கட்சிக்குதான் ஓட்டு.’ என்று பிடிவாதமாக அ.தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள்! என்றே தகவல். Ajith fans political decision ...!

இந்த நிலை முழுக்க முழுக்க தி.மு.க.வுக்கே சாதகம். காரணம்? இதுவரையில் தங்களை முழுமையாக வெறுத்த லட்சக்கணக்கானோரில் பாதி பேர் தங்களை இம்முறை ஆதரிக்க போகின்றனர். ஆனால் அ.தி.மு.க.வுக்கோ பாதி லாஸ் ஆகிறது. தல ரசிகர்களை வளைத்தது போதாதென்று, விஜய் ரசிகர்களை மிக முழுமையாக தங்களுக்கு சாதகமாக திருப்புவதில் சக்ஸஸ் அடைந்திருக்கிறதாம் ஸ்டாலின் தரப்பு. எனிஹவ்! தல ரசிகர்களின் பாதி இங்கே, மீதி அங்கே என தாறுமாறான முடிவால் தெறித்துக் கிடக்கிறது அரசியல் களம்.

Follow Us:
Download App:
  • android
  • ios