AIIMS hospital will be built in two years - Minister Vijayabaskar
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால், டெல்லிக்கு இணையான மருத்துவம் மதுரையில் கிடைக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததை அடுத்து, மருத்துவமனை
அமைக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன.
மதுரை, தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தல் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போர்க்கால அடிப்படையில் தொடங்கும் என்றார். அதற்கான நவீன மருத்துவ வசதிகள், மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படும் என்றார்.
தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது சுகாதார துறைக்கு மிகப் பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால், டெல்லிக்கு
இணையான மருத்துவம் மதுரை மக்களுக்கும் கிடைக்கும்
இரண்டு ஆண்டுகளில் ரூ.1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
