Asianet News TamilAsianet News Tamil

நேற்று வெளியானது கருத்துக்கணிப்பா? அதிமுக தான் அடுத்தும் ஆட்சியமைக்கும்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

வாக்கு எண்ணிக்கையின் போது, அந்த மையங்களில் குண்டர்களை அனுப்பி வைக்கும் செயல்களை திமுக செய்யும், எனவே அதில் தேர்தல் ஆணையம் கவனமாக இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

AIADMK will rule next... Minister jayakumar
Author
Chennai, First Published Apr 30, 2021, 1:41 PM IST

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை பட்டினம்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கருத்து கணிப்பு என்பது எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று. அதிமுக, மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார். மேலும் 200 பேரிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு, கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது. எனவே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, பொதுமக்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்தார். அதேபோல் தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் இருந்த மாதிரியே, வாக்கு எண்ணிக்கை வரையிலும் உற்சாகத்தோடு இருக்க வேண்டும் என்றார்.

AIADMK will rule next... Minister jayakumar

மேலும், தபால் வாக்குகளில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதையே தான் பின்பற்ற வேண்டும். தபால் வாக்குகளை முதலில் தான் என்ன வேண்டும் எனவும், ஏற்கனவே பின்பற்ற நடைமுறை தான் வேண்டும் என்று கூறினார். கடந்த முறை நடந்த தேர்தலின் போதெல்லாம் கருணாநிதி இருந்த போது, திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று போஸ்டர் லாம் அடித்து வைத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் மகத்தான வெற்றியை பெற்றார். எனவே திமுக ஒவ்வொரு முறையும் போஸ்டர் அடித்து தோற்று தான் போவார்கள். அதேபோல் தான் இந்த முறையும் என்றார்.

AIADMK will rule next... Minister jayakumar

தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது, அந்த மையங்களில் குண்டர்களை அனுப்பி வைக்கும் செயல்களை திமுக செய்யும், எனவே அதில் தேர்தல் ஆணையம் கவனமாக இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios