தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவெனத்டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவரது அம்மா பழனியம்மாள், மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் மருமகளுடன் வருகை தந்து வாக்குப் பதிவு செய்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அதிமுக வேட்பாளர்கள் பலரும் வெற்றிபெறுவார்கள். அதிமுக அறுதி பெரும்பான்மையுடன் 3வது முறை மீண்டும் ஆட்சியை அமைக்கும். தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர் என்றார்.