Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் அரசியலில் இனி அதிமுக தேறாது... அண்ணா ஆட்சியைப் போல மு.க.ஸ்டாலினின் ஆட்சி.. ஆர்.எம்.வீரப்பன் பொளேர்!

தேர்தல் அரசியலில் அதிமுக இனி வெற்றி பெறவே முடியாது. அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியைப் போன்று தற்போதைய மு.க. ஸ்டாலின் ஆட்சி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
 

AIADMK will no longer be involved in election politics... MK Stalin's rule is like Anna's rule.. RM Veerappan says!
Author
Chennai, First Published Oct 19, 2021, 8:44 PM IST

அதிமுக பொன்விழாவையொட்டி எம்.ஜி.ஆரின் நிழல் என்று வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். கழக நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன், ஆங்கில் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் எம்.ஜி.ஆர். கட்சியைத் தொடங்கியது, ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தது, ஜானகி முதல்வரானது, ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றியது எனப் பழைய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன். தற்போதையை அதிமுகவின் எதிர்காலம் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சியைப் பற்றியும் ஆர்.எம். வீரப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.AIADMK will no longer be involved in election politics... MK Stalin's rule is like Anna's rule.. RM Veerappan says!
“கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற இடங்களுக்கு எம்.ஜி.ஆர். விதைத்த விதைகள்தான் காரணம். ஜெயலலிதா பணத்தை கொண்டு கட்சியை நடத்தினார். ஆனால், தற்போதைய தலைவர்கள் அதுவும் செய்ய முடியாது. தேர்தல் அரசியலில் அதிமுக இனி வெற்றி பெறவே முடியாது. காங்கிரஸ் செய்த தவறுகளால் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், பாஜகவால் தமிழ்நாட்டில் சாதிக்க முடியாது. அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியைப் போன்று தற்போதைய மு.க. ஸ்டாலினின் ஆட்சி உள்ளது. திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால் இனி புதிதாக யாராவது வர வேண்டும். ஆனால், தற்போது அதுபோன்று யாரும் இல்லை.” என்று ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios