Asianet News TamilAsianet News Tamil

திமுக விஞ்ஞான அமைச்சருக்கு நோபல் பரிசுதர பரிந்துரைக்கும் அதிமுக தெர்மகோல் அமைச்சர்..!

ஆக, ஒவ்வொரு ஆட்சிக்கும் ஒவ்வொரு விஞ்ஞான அமைச்சர்கள்..? வளர்க தமிழ்நாடு... வாழ்க ஒன்றிய அரசு என பலரும் கதைக்கிறார்கள்.

AIADMK thermocol minister nominates Nobel laureate for DMK science minister
Author
Tamil Nadu, First Published Jun 26, 2021, 3:22 PM IST

தமிழ் நாட்டில் மின்பகிர்மானத்தில் தடை ஏற்படுவதற்கு அணில்கள்தான் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த விவகரம் இன்னும் மின்சாரம் போல் தடைபடாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. AIADMK thermocol minister nominates Nobel laureate for DMK science minister

அணில்களால் ஏற்படும் மின் தடை உலக அளவில் மின் வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று கூறினார். இதை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செந்தில் பாலாஜியின் கூற்றை கிண்டல் செய்துள்ளார். ’’அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும். செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் நல்லவேளை நான் தப்பித்து விட்டேன். எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றன’’என்று கூறியுள்ளார்.AIADMK thermocol minister nominates Nobel laureate for DMK science minister

ஏற்கெனவே அணையில் தெர்மகோல் விட்டு நீரை பாதுகாக்க வேண்டும் என களத்தில் இறங்கியதால் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் ராஜூ இன்றுவரை விமர்சிக்கப்படுகிறார். அதனை அடுத்து இந்த ஆட்சியில் அணில்களால் மின்சாரம் தடை படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பது பெரும் நகைச்சுவை கலந்த விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தெர்மகோல் விஞ்ஞானி, அணில் விஞ்ஞானத்தை விமர்சித்துள்ளார் எனபலரும் பேசி வருகின்றனர். ஆக, ஒவ்வொரு ஆட்சிக்கும் ஒவ்வொரு விஞ்ஞான அமைச்சர்கள்..? வளர்க தமிழ்நாடு... வாழ்க ஒன்றிய அரசு என பலரும் கதைக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios