அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன் , நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதை கனிமொழி தனக்குக் கற்றுக் கொடுத்ததாக புகழ்ந்து பேசி இருந்தார். இந்தநிலையில் தற்போது அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு உள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாலே கட்சியில் இருந்து நவநீதிகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அதிமுக அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க வந்த நவநீதகிருஷ்ணன், ஆட்டோவில் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.