மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை... வேல்முருகனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக..!

தஞ்சை அருகே மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேற்று வேல்முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

AIADMK removes Velmurugan from party

தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர் பாசறை தலைவர் வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. மகளது தோழிக்கு பாலியல் தொல்லை அளித்த அ.தி.மு.க., பிரமுகர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார் தஞ்சை தெற்கு அதிமுக இளைஞர் பாசறை தலைவர் வேல்முருகன்.AIADMK removes Velmurugan from party

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன், தெற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர். இவரது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். அவருடன், அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயதான மாணவியும் படித்து வருகிறார். இந்நிலையில் வேல்முருகன், மகளின் தோழிக்கு, தன் மகள் அனுப்புவதை போல தொடர்ந்து, 'வாட்ஸ் ஆப்'பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

AIADMK removes Velmurugan from party

பின், அந்த மாணவியின் வீட்டுக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மன உளைச்சல் அடைந்த மாணவி, வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். வேல்முருகனை போலீசார், 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தஞ்சை அருகே மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேற்று வேல்முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios