சசிகலா வந்தால் பெரிய மாற்றம் வந்துவிடும் என்றனர். ஆனால், அவரோ ஆன்மீக பணிகளுக்கு சென்று விட்டார் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

சசிகலா வந்தால் பெரிய மாற்றம் வந்துவிடும் என்றனர். ஆனால், அவரோ ஆன்மீக பணிகளுக்கு சென்று விட்டார் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேனியில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;- அமமுக என்ற கட்சியை டி.டி.வி.தினகரன் தேவையில்லாமல் ஆரம்பித்துள்ளார். ஒரு கட்சியை நடத்திக்கொண்டு இன்னொரு கட்சியை எப்படி மீட்க முடியும். மக்களையும் தன்னை சார்ந்தவர்களையும் தொடர்ந்து குழப்பிக் கொண்டு வருகிறார்.

அவரை நம்பிச்சென்றால் நடுத்தெருவில்தான் நிற்க முடியும். இந்த தேர்தலுடன் அமமுக காணாமல் போய்விடும். சசிகலா வந்தால் பெரிய மாற்றம் வந்துவிடும் என்றனர். ஆனால், அவரோ ஆன்மீக பணிகளுக்கு சென்று விட்டார். கூட்டணியில் இருந்தாலும் அதிமுக, பாஜக கொள்கைகள் வேறு. ஸ்டாலின் போடியில் பேசும்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்றும், அவர் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் என்றும் பேசியுள்ளார். ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கட்சி தொடர்பாக அதிகமுறை ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

கொடுத்த முதல்வர் பதவியை அப்படியே மீண்டும் ஒப்படைத்தார் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதாவிற்கு நல்ல மதிப்பு உண்டு. ஆனால் அ.தி.மு.கவில் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் அனுபவித்துவிட்டு தங்கதமிழ்ச்செல்வன் துரோகியாக மாறி தி.மு.கவில் இணைந்துள்ளார். தான் இன்னும் அதிமுகவில் இருப்பதாக நினைத்துக்கொண்டே அவர் தனது பேட்டியில் திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்று தெரிவித்துள்ளார் என புகழேந்தி கூறியுள்ளார்.