Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அலுவலகத்தில் அடிதடி.. மண்டை உடைப்பு.. 13 பேர் மீது வழக்கு.. ரணகளமான உள்கட்சி தேர்தல்..

அந்த பதவிகளைப் பெறுவதில் கட்சியினரிடையே கடும் கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில்தான் கடலூர் பாதிரிக்குப்பம் உட்கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் உட்கட்சி தேர்தலுக்கான மனு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். 

AIADMK office riot .. skull fracture .. case against 13 people .. battlefield internal party election ..
Author
Chennai, First Published Dec 21, 2021, 1:41 PM IST

கடலூரில் நடைபெற்ற உட்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே அதிமுக உட்கட்சி  தேர்தல் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில் இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் முன், அதிமுக அரசை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்துச் சென்றார் சசிகலா, பின்னர் அது சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கே சூன்யமாக மாறிப்போனது. அதிரடியாக சசிகலா குடும்பத்தையே கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்தார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தையும் ஓரங்கட்டி கட்சியின் முதன்மையானவராக வளர்ந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி கோஸ்டியை நம்பி மோசம் அடைந்ததாக எண்ணிய பன்னீர்செல்வமும் சசிகலா பக்கம் எந்த நொடியிலும் சேருவார் என்று தொடர்ச்சியாக கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளும் அப்படியே இருந்து வந்தது. சிறையிலிருந்து விடுதலையானதும் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெயர் அதிர்வுகளை சசிகலா ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரே ஒரு நாள் பிரம்மாண்ட வரவேற்புடன் வீட்டிற்குள் முடங்கினார் அவர்.

AIADMK office riot .. skull fracture .. case against 13 people .. battlefield internal party election ..

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்த துடன், ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதே நிலை தொடர்ந்தால் அதிமுகவை காப்பாற்ற முடியாது இனி கட்சியை கைப்பற்றுவதை தவிற வேறு வழியில்லை. என ச சிகலா ஒருபுறம் களமிறங்கி உள்ளார். இது ஒரு புறம் ஒபிஎஸ் இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தி தங்களுக்கு உள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்தில் அதில் போட்டி இன்றி ஓபிஎஸ்.இபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து மாவட்ட வாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கடலூர் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பதவிகளுக்கான புதிய நிர்வாகிகள் இன்னும் நிரப்பப்படவில்லை.

AIADMK office riot .. skull fracture .. case against 13 people .. battlefield internal party election ..

அந்த பதவிகளைப் பெறுவதில் கட்சியினரிடையே கடும் கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில்தான் கடலூர் பாதிரிக்குப்பம் உட்கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் உட்கட்சி தேர்தலுக்கான மனு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்போது கடலூர் நகர துணை செயலாளர் கந்தன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அனைத்து வார்டுகளிலும் புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகியான குமார் என்ற சேவல் குமாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பிறகும் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பின்ன அது கைகலப்பாக மாறியது. அப்போது அங்கிருந்த கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பிளாஸ்டிக் சேர்கள் தூக்கி  வீசப்பட்டன. இதனால் அங்கிருந்த பொது மக்கள் சிதறி ஓடினர்.

AIADMK office riot .. skull fracture .. case against 13 people .. battlefield internal party election ..

இதனையடுத்து கடலூர்- திருவந்திபுரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பதற்றம் அதிகரித்தது. இந்த கோஷ்டி மோதலில் இரு தரப்பிலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து டிஎஸ்பி கரிகாலன் சங்கர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் கடலூரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோதலில் படுகாயம் அடைந்தவர்கள் தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து நகர துணை செயலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவுசெய்தனர். அதேபோல் படுகாயமடைந்த மணி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகரத் துணைச் செயலாளர் கண்ணன் மற்றும் அவரின் தரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து கடலூரில் உட்கட்சி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios