Asianet News TamilAsianet News Tamil

அதிமுக எம்.பி.க்கு திடீர் உடல்நலக்குறைவு... தனியார் மருத்துவமனையில் அனுமதி..! |

அதிமுக மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் நவநீதிகிருஷ்ணன். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். தமிழக அரசு தலைமை வழக்கறிஞராகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நவநீதிகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டவர்.

aiadmk mp navaneethakrishnan private hospital admitted
Author
Delhi, First Published Mar 4, 2020, 3:46 PM IST

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

aiadmk mp navaneethakrishnan private hospital admitted

அதிமுக மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் நவநீதிகிருஷ்ணன். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். தமிழக அரசு தலைமை வழக்கறிஞராகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நவநீதிகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டவர். 

aiadmk mp navaneethakrishnan private hospital admitted

இந்நிலையில், அதிமுக எம்.பி.யாக உள்ள நவநீதகிருஷ்ணனுக்கு திடீர் உடல்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனே அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு மாநிலங்களவையில்  நவநீத கிருஷ்ணன் பேசும்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios