ஜெயலலிதாவை தவறான பாதைக்கு இழுத்தவர்தான் சசிகலா எனவும் அவரின் செயலுக்கு ஜெயலலிதா கட்டுப்படவில்லை எனவும் அதிமுக எம்.பி குமார் தெரிவித்துள்ளார். 

எடப்ப்பாடி அணிக்கு நெருக்கமானவர்களை களை எடுப்பதாக கூறி டிடிவி தினகரன் ஒவ்வொருவரையாக கழக பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறார். 

அந்த வகையில், திருச்சி எம்.பி குமாரை இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொறுப்பில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு நடிகர் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த திருச்சி எம்.பி குமார், எந்த ஒரு சட்டமன்ற தேர்தலிலும் மன்னார்குடியில் அதிமுக வெற்றி பெற முடியவில்லை எனவும் ஜெயலலிதாவால் சொகுசு வாழ்க்கை அனுபவித்துவிட்டு தற்போது சசிகலாவால் அதை விட்டு மீளமுடியவில்லை எனவும் தெரித்தார். 

ஜெயலலிதாவை தவறான பாதைக்கு இழுத்தவர்தான் சசிகலா எனவும் அவரின் செயலுக்கு ஜெயலலிதா கட்டுப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதா பெயரை பயனபடுத்தி சசிகலா குடும்பம் தங்களை வளப்படுத்தி கொண்டது எனவும் சசிகலா சிறையில் எவ்வளவு சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டார். 

டிடிவி தினகரனுக்கு பைத்தியம் முற்றிவிட்டது எனவும் 21 எம்.எல்.ஏக்களை டிடிவி பிளாக்மெயில் செய்து வருகிறார் எனவும் தெரிவித்தார். 

சசிகலாவின் புகைப்படத்தை வாக்குகள் கிடைக்காது என டிடிவிக்கு தெரியும் எனவும் எனவே அன்று டிடிவி சசிகலாவின் புகைப்படத்தையும் பெயரையும் பயன்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார். 

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினரும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தருகின்றனர் எனவும் இனிமேல் எந்த எம்.எல்.ஏக்களும் டிடிவி பக்கம் செல்லமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். 

டிடிவி தினகரன் ஒரு செல்லாக்காசு எனவும், ஜெவால் நியமனம் செய்யப்பட்ட நாங்கள் தங்க காசுக்கள் எனவும் எம்.பி .குமார் தெரிவித்தார்.