விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த மறுநாளே மீண்டும் ஒரு அதிமுக எம்.பி. காமராஜ் அவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.பி. காமராஜ் இன்று சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே அரசு விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாழப்பாடி அருகே கார் சென்றிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது. காரின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அதிமுக எம்.பி. சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்.பி. காமராஜின் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய அவரது கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் அவரது காரை கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து காமராஜ் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பி உள்ளார். முன்னதாக திண்டிவனத்தில் அருகே நேற்று நடத்த கார் விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.