Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ் மகனுக்காக பணப்பட்டுவாடா... அதிமுக மீது ஆதாரத்துடன் அமமுக புகார்..!

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இரட்டை இலையில் வாக்களிக்குமாறு கூறி ஓட்டுக்கு 1000 ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

AIADMK money distribution
Author
Tamil Nadu, First Published Apr 16, 2019, 11:51 AM IST

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இரட்டை இலையில் வாக்களிக்குமாறு கூறி ஓட்டுக்கு 1000 ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விஐபி தொகுதிகளில் ஒன்றான தேனி மக்களவை தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இதில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். AIADMK money distribution

இந்நிலையில் தேனி, போடிநாயக்கனூர் தொகுதிகளுக்குட்பட்ட மேல சொக்கநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது போன்று, வீடுதோறும் சென்று வாக்கு ஒன்றுக்கு 1000 ரூபாய் வீதம் அதிமுகவினர் பணபட்டுவாடா செய்து வருகின்றனர். இந்த செயலில், மேலசொக்கநாதபுரத்தின் முன்னாள் சேர்மன் சவிதா அருண்பிரசாத் நேரடியாக ஈடுபட்டிருப்பது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 AIADMK money distribution

தேனி தொகுதியைப் பொறுத்தவரையில் மற்ற சமூகத்தினருக்கு வாக்குக்கு 1000 ரூபாயும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்குக்கு 1500 ரூபாயும் கொடுக்கப்பட்டு வருகிறது. எப்படியாவது ஓ.பி.எஸ் மகன் வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தேனி முழுவதும் அதிமுகவினர் பணபட்டுவாடா செய்து வருவதாக ஆட்சியரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. AIADMK money distribution

 ’’நேற்று அரவு 9 மணிக்கு தொடங்கி காலை 6 மணிக்குள் ஓட்டுக்கு 100 ரூபாய் வீதம் முழுப்பட்டுவாடாவை அதிமுக கச்சிதமாக முடித்துள்ளது. 9 மணிநேரம் 6 சட்டமன்ற தொகுதிகளில் 120 கோடி ரூபாயை செலவழித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது’’  பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் கூறியுள்ளார். புகார் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ள மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios