குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் சில எம்பிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 

இதனிடையே, வரும் 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், எம்எல்ஏக்கள் எல்லாருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. அந்த பரிசோதனையில் ஒரு சில எம்எல்ஏக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.