Asianet News TamilAsianet News Tamil

அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் - டிடிவி.தினகரன் சந்திப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

சாத்தூர் தொகுதி  அதிமுக எம்எல்ஏ ராஜவர்மனை தொடர்ந்து பிரபு, கலைசெல்வன், ரத்தனசபாபதி ஆகியோர் டிடிவி.தினகரனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

AIADMK mla rajavarman meet ttv dhinakaran
Author
Tamil Nadu, First Published Mar 11, 2021, 12:44 PM IST

சாத்தூர் தொகுதி  அதிமுக எம்எல்ஏ ராஜவர்மனை தொடர்ந்து பிரபு, கலைசெல்வன், ரத்தனசபாபதி ஆகியோர் டிடிவி.தினகரனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன். கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் சாத்தூர் தொகுதியில் எதிர்கோட்டை சுப்ரமணியன் வெற்றி பெற்றார். பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் டி.டி.வி. தினகரன் அணியில் சேர்ந்தார். இதனால், கட்சி தாவலில் ஈடுபட்டதால் எதிர்கோட்டை சுப்ரமணியன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

AIADMK mla rajavarman meet ttv dhinakaran

ஆனால், அதன்பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவியது. அமைச்சர் மீது கடும் குற்றச்சாட்டுகளை ராஜவர்மன் கூறிவந்தார். இதனிடையே நேற்று வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை.

AIADMK mla rajavarman meet ttv dhinakaran

இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ராஜவர்மன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சரின் கைகூலிக்குதான் பதவி என்றாகி விட்டது. அதிமுக இயக்கத்திற்காக பாலாஜியா அல்லது பாலாஜிக்கு இயக்கமா என்று தெரியவில்லை. அவரை எதிர்த்ததால் தான் எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. என்னை கொலை செய்து விடுவதாக பல மிரட்டல்கள் விடுத்தவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. வேட்பாளர் பட்டியலில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு இல்லை” என குமுறினார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ ராஜவர்மன் டிடிவி தினகரனை சந்தித்து பேசி வருகிறார். அதிமுகவில் சீட் மறுக்கப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios