26 நாட்கள் சிகிச்சைக்குப் பின் கொரோனாவில் இருந்து குணமடைந்த ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி வீடு திரும்பினார்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.பழனிக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் ஜூன் 12ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து. ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 பின்னர், அவரது மனைவி, மகள் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மேலும், அவரின் மாமியார் மற்றும் கார் ஓட்டுநருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிமுக எம்.எல்.ஏ. வின் உடல் நலம் குறித்து அவ்வப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வந்தார். 

இந்நிலையில், 26 நாட்கள் சிகிச்சைக்குப் பின் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ. பழனி வீடு திரும்பினார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட எம்.எல்.ஏ. பழனி மருத்துவர் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.