கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கொரோனா தனது கோர மூகத்தை காட்ட தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரது மகள், மருமகன் மற்றும் பேத்திக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சூழ்நிலையில் தற்போது கோவை தெற்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர்வீட்டில் இருக்கும் பணியாளர்கள் மற்றும் அவர் சென்றுவந்த பகுதியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அதிமுகவில் ஸ்ரீபெரும்பத்தூர் எம்எல்ஏ பழனி, அமைச்சர் கே.பி. அன்பழகன், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு, பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன், ஆகியோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், திமுகவில் தலா 4 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.