அதிமுக அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிமுக அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,000ஐ நெருங்கியுள்ளது. இந்த நோய் தொற்றால் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், வேட்பாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் தப்பவில்லை. ஒரு சிலர் உயிரை இழந்தும் இருக்கிறார்கள். பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான வளர்மதி திருச்சி உறையூரில் உள்ள வீட்டில் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வளர்மதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.