Asianet News TamilAsianet News Tamil

பாஜக உளறலுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது... நெஞ்சை நிமிர்த்தும் அதிமுக அமைச்சர்..!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என அக்கட்சியின் அமைச்சர் மஃப.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

AIADMK minister can't answer all BJP grievances ..!
Author
Tamil Nadu, First Published Oct 9, 2020, 6:01 PM IST

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என அக்கட்சியின் அமைச்சர் மஃப.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பை பற்ற வைத்து இருக்கிறார். அதனையே வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் முன் மொழிந்து வருகின்றனர்.AIADMK minister can't answer all BJP grievances ..!
 
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக அமைச்சர் மஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்களை அமைச்சர் பாண்டியராஜன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அறிவித்துள்ளோம். இந்த கூட்டணி அதிமுக தலைமையில் தான் அமையும். கூட்டணி கட்சிகள் இணைந்து முடிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் அது அவர்களின் உரிமை.

AIADMK minister can't answer all BJP grievances ..!

எங்களைப் பொறுத்தவரை இந்த கூட்டணியில் பெருவாரியான தொகுதிகளில் அதிமுக தான் தேர்தலை சந்திக்கும் என்பதால், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் கூட்டணியின் முதல்வராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios