எந்த கொம்பனுக்கும், யாருக்கும் அதிமுக ஒரே போதும் பயப்படாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது. இதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மாறி, மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேபோல், எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முதல்வர் பழனிசாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, பாஜக - அதிமுக இடையேயான மோதலுக்கு வலு சேர்க்கும் வகையில் தற்போது வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற 21ம் தேதி தமிழகம் வர உள்ளார். சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது. இவரது வருகை தமிழக பாஜகவிற்கு உத்வேகம் ஊட்டும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷாவின் வருகை குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அமித் ஷாவின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு திமுக, அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எந்த கொம்பனுக்கும், யாருக்கும் அதிமுக பயப்படாது. அமித்ஷா தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என முருகன் பேசியது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.