TN Local Body Election Result 2022 : சீலிடப்பட்டதா பெட்டியை பிரித்து எண்ணியதாக அதிமுக உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்... 

கோவையில் திமுக 19 இடங்களை தன வசம் ஆக்கியுள்ளது...இதில் 1 இடத்தை அதிமுக வந்துள்ளது...இந்நிலையில் 32 வைத்து வார்டில் ஓட் கவுண்டிங்கில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்துள்ளார்.. இந்த சூழலில் திடீரென அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சீலிடப்பட்டதா பெட்டியை பிரித்து எண்ணியதாக குற்றம் சாட்டியுள்ளனர்..இருந்தும் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது...பின்னர் காவல்துறையினரின் அறிவுறுத்தலுக்கு பிறகு வேட்பாளர்கள் களைந்து சென்றுள்ளனர்...

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் திமுக முன்னிலை பெற்று வரும் நிலையில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதில் ஒரு இடத்தில் கூட அதிமுக முன்னிலையில் இல்லை, அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றும் என ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அது தற்போது நிரூபணமாகியுள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம் 12601 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வழக்கம்போல சென்னை திமுகவுக்கு தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது, அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.