Asianet News TamilAsianet News Tamil

திடீரென கட்சி ஆபிஸ் வந்த ஓபிஎஸ்... பதறிப்போன நிர்வாகிகள்... எடப்பாடி தரப்பு உஷார்..!

சுமார் இரண்டு வாரங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்ல உள்ள நிலையில் ஓபிஎஸ் திடீரென அதிமுக தலைமை அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

AIADMK Head Office panneerselvam visit.... edappadi palanisamy shock
Author
Tamil Nadu, First Published Aug 13, 2019, 10:35 AM IST

சுமார் இரண்டு வாரங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்ல உள்ள நிலையில் ஓபிஎஸ் திடீரென அதிமுக தலைமை அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் சுமார் இரண்டு வாரங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 19ந் தேதி தொடங்கும் இந்த பயணத்தின் நோக்கம் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவது தான் என்கிறார்கள். எடப்பாடியுடன் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி செல்வது உறுதியாகியுள்ளது. மேலும் சில அமைச்சர்களும் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 AIADMK Head Office panneerselvam visit.... edappadi palanisamy shock

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுவிட்டால் முதலமைச்சர் என்கிற கடமையை அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஓபிஎஸ் தான் பார்க்க வேண்டும் என்பது மரபு. ஆனால் இதனை மீறி சில முக்கிய விஷயங்களை கவனித்துக் கொள்ளும்படி முதலமைச்சர் தனக்கு இரண்டு கரங்களாக இருக்கும் எஸ்பிவேலுமணி மற்றும் தங்கமணியிடம் ஒப்படைத்துள்ளதாக சொல்கிறார்கள். AIADMK Head Office panneerselvam visit.... edappadi palanisamy shock

இதனால் ஓபிஎஸ் டென்சன் அடைந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள். இந்த பரபரப்பான சூழலில் நேற்று ஓபிஎஸ் திடீரென சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவர் வந்த பிறகு தான் தலைமை அலுவலக நிர்வாகிகளுக்கே ஓபிஎஸ் வந்திருப்பது தெரிந்தது. யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென வீட்டில் இருந்து புறப்பட்ட ஓபிஎஸ் நேராக கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பார் என்கிற பதவியில் இருந்தாலும் பொருளாளர் பொறுப்பையும் ஓபிஎஸ் தான் சேர்ந்து கவனித்து வருகிறார்.

 AIADMK Head Office panneerselvam visit.... edappadi palanisamy shock

அந்த வகையில் ஐடி ரிட்டர்ன் பைல் செய்வது தொடர்பாகவும் சில கணக்கு வழக்குகளையும் கவனிக்கவுமே ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வந்ததாக கூறிக் கொள்கிறார்கள். ஆனால் கட்சி அலுவலகம் வந்த ஓபிஎஸ் தொலைபேசியில் ஒரு சிலருடன் நீண்ட நேரம் ஆலோசித்ததாக கூறுகிறார்கள். மேலும் ஒரு சிலரிடம் செல்போன் வாயிலாகவே விளக்கங்கள் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார்கள். ஓபிஎஸ் கட்சி அலவலகம் வந்த தகவல் உடனடியாக முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரும் என்ன விஷயம் என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இருந்து தொடர்பாக மூச் விட மறுக்கிறார்கள். இதனால் எடப்பாடி தரப்பு டென்சனில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios