எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்தார்கள்.. எடப்பாடி செய்யவில்லை.! அதிமுக வரலாற்றை சொன்ன பண்ருட்டி ராமச்சந்திரன்
10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக ஆதரவளித்தது பல்வேறு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்ட திருத்த மசோதா கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி வீசிக்க தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி லலித் நீதிபதி ரவீந்திர பட் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்
மற்ற 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்ததால் பெரும்பான்மை அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லும் என சட்ட அமர்வு உறுதி செய்தது. 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அதிமுக ஏற்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காமல் இருப்பது அரசியல் வட்டாரங்களிலும், அரசியல் விமர்சகர்கள் இடத்திலும் அதிருப்தியை உண்டாகியிருக்கிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதுகுறித்து பேசும் போது, ‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தினார் எம்.ஜி.ஆர். அதனை 9வது அட்டவணையில் சேர்த்து, அரசியலமைப்பு அங்கீகாரத்தை பெற்று தந்தார் ஜெயலலிதா. அந்த வழியில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?
இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !