"அம்மா வீட்டில் தவறு செய்தவருக்கு பதவி எதற்கு?" இளங்கோவனுக்கு எதிராக கொதிக்கும் அதிமுக நிர்வாகி..!
சேலம் மாவட்டத்தில் அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவருக்கு எப்படி மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கலாம்? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியிடம் இளங்கோவன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார்.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தின் விசாரணை வளையத்தில் உள்ள இளங்கோவனை சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என சேலம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஜெயலலிதா வசித்த கொடநாடு இல்லம் கட்சித்தொண்டர்களுக்கு கோயிலாகும். அந்த கோயிலில் கொலை- கொள்ளை நடந்துள்ளது. இதில் தற்போது போலீஸ் விசாரணை வளையத்திற்குள் இளங்கோவன் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நேரத்தில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி எப்படி வழங்கலாம். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரால் ஏன் கூற முடியவில்லை? அவரை விட அதிமுகவில் மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியிருக்கலாமே? பெரும்பாலான ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன் மாவட்ட செயலாளர் ஆனதை ஏற்றுக்கொள்ளவில்லை.
சேலம் மாவட்டத்தில் அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவருக்கு எப்படி மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கலாம்? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியிடம் இளங்கோவன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். இதனை வைத்தே எல்எல்ஏக்கள், நிர்வாகிகளை மிரட்டி வைத்துள்ளார். அவருக்கு ஏமாற்றும் திறமை அதிகமாக இருக்கிறது. இளங்கோவன் எடப்பாடிக்கு நண்பரா? நிழலா என்பது எங்களுக்குத் தெரியாது.
கட்சியில் குழி பறிப்பதில் இளங்கோவன் நம்பர் ஒன். இப்படிப்பட்டவருக்கு எடப்பாடி பழனிசாமி எப்படி மாவட்ட செயலாளர் பதவி கொடுத்தார் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை என வையாபுரி தெரிவித்துள்ளார்.