Asianet News TamilAsianet News Tamil

இது நம்ம தம்பி தான்... விட்டுடுங்க... கொடநாடு வழக்கில் வசமாக சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்..!

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

AIADMK ex-minister caught in Kodanadu case
Author
Tamil Nadu, First Published Sep 9, 2021, 4:05 PM IST

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சருக்கு சொந்தமான கொட நாடு எஸ்டேட்டில் உள்ள ஆடம்பர பங்களாவில் கடந்ஹ 2017ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது.  சம்பவம் நடைபெற்ற அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டிய கனகராஜ், உள்ளிட்டோர் கோத்தகிரி வழியாக சேலம் செல்கின்றனர். அதே இரவு, கேரளாவில் இருந்து இந்த சம்பவங்களில் ஈடுபட்ட, சிபு, உதயகுமார், மனோஜ் உள்ளிட்டோர் கேரளாவில் உள்ள வயநாட்டுக்கு செல்கின்றனர்.  அப்போது சோதனைச் சாவடியில் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் வசந்த குமார், உதவி ஆய்வாளர் சத்யன் ஆகியோர் அவர்கள் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். AIADMK ex-minister caught in Kodanadu case

அப்போது இந்த வாகனத்திற்கு முறையான இன்சூரன்ஸ், உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என அந்த வாகனத்தை பிடித்து வைக்கிறார்கள். அப்போது முன்னாள அமைச்சர், காவல்துறை ஆய்வாளருக்கு போன் செய்து , அந்த தம்பிகள் நமக்கு வேண்டப்பட்டவர்கள், அவர்களை விடுவித்து விடுங்கள் என அமைச்சர் கூறியதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக ஆய்வாளர், உதவி ஆய்வாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் சமந்தப்பட்ட அந்த அமைச்சரை இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரவுள்ளனர். AIADMK ex-minister caught in Kodanadu case

ஆக மொத்தத்தில் கொடநாடு விவகாரம் அதிமுக அமைச்சர்கள் மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும் தலைவலியாகி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios