தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை’ என்று கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் விருதுநகரில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார் . 

அப்போது பேசிய அவர், ‘கடந்த 8 மாதங்களாக திமுக அரசு எந்த நல திட்டத்தையும் செய்யவில்லை. திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு. அதில் நியாயம் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார். ஒரு மூன்று, நான்கு இடங்களில் ஆய்வு செய்வது போல் பாவனை செய்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார், டீ குடிக்கிறார், பளு தூக்குகிறார். 8 மாதத்தில் வேறு எந்த புதிய நல திட்டமும் நடைபெறவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை’ என்று கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.