அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மாலை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 

இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இதில் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. அதேபோல் பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.