Asianet News TamilAsianet News Tamil

அடேங்கப்பா லிஸ்டில் இல்லாத ஃப்ராடுத்தனமா இருக்கே... அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத்தூவிய ஓபிஎஸ் தம்பி!!

அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழக அரசியல் அரங்கையே அதிர வைத்த சமீபத்திய விவகாரமென்றால் அது ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதுதான். மணல் கடத்தல், கூலிப்படை ஏவி மிரட்டல் என்று தொடர் குற்றச்சாட்டுக்களில் தேனியில் இவரது பெயர் அடிபட்ட நிலையில் திடீரென்று தூக்கப்பட்டுள்ளார்.

AIADMK deputy cm  Panneerselvam's Brother O Raja Background
Author
Tamil Nadu, First Published Dec 21, 2018, 2:11 PM IST

அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழக அரசியல் அரங்கையே அதிர வைத்த சமீபத்திய விவகாரமென்றால் அது ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதுதான். மணல் கடத்தல், கூலிப்படை ஏவி மிரட்டல் என்று தொடர் குற்றச்சாட்டுக்களில் தேனியில் இவரது பெயர் அடிபட்ட நிலையில் திடீரென்று தூக்கப்பட்டுள்ளார். 

கழகத்திலிருந்தே தூக்கப்படுமளவுக்கு தம்பி என்னதான் தப்பு செய்ததாக அண்ணன் கண்டுபிடித்துள்ளார்? என்பதுதான் அ.தி.மு.க.வினரையே குடையும் கேள்வி. இதற்குப் சில சர்ச்சைகள் பற்றிய விளக்கங்கள் பதிலாக கிடைத்தாலும் கூட எல்லோரையும் அதிர வைத்திருக்கும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், ’தன் மகள் பெயரில் தமிழ்நாட்டில் புதிய கிராமத்தையே போலியாக உருவாக்கினார் ராஜா! அதுதான் அவரது அஸ்திவாரத்தை ஆட்டிவிட்டது.’ என்கிறார்கள்.  AIADMK deputy cm  Panneerselvam's Brother O Raja Background

இந்த புகாரை யாரோ அட்ரஸ் இல்லாத பேர்வழி, போகிற போக்கில் ஓதியதில்லை. ராஜாவின் சரிவுக்கு காரணமான வழக்கை தொடந்த அமாவாசி என்பவரை இதைப் போட்டு உடைத்துள்ளார். அமாவாசி பற்ற வைத்திருக்கும் தகவல் இதுதான்...”மதுரை ஆவின் கூட்டுறவின் கீழ் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது தொகுதிகள் வருகின்றன. இவற்றில் கடைசி தொகுதியான போடியில் தான் ஓ.ராஜா போட்டியிட்டு இயக்குநர் ஆனார். கோ ஆபரடிவ் தேர்தல் விதிப்படி ஒரு கிராமத்தில் பால் கூட்டுறவு சொசைட்டி சேர்மனாக இருந்தால்தான் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியும்.

 AIADMK deputy cm  Panneerselvam's Brother O Raja Background

ஆனால் ஓ.ராஜா அப்படி எதிலும் இல்லை. அதேவேளையில் ஆவின் தலைவர்! எனும் பெரும் பதவி மீதான ஆசையை விடவும் முடியவில்லை. அதனால் செய்தார் பாருங்க ஒரு திருட்டுத்தனம். அதாவது, ‘உப்புக்கோட்டை பேரூராட்சியின் கீழ் ரோஸி நகர் வருவாய் கிராமத்தில் உள்ள பால் கூட்டுறவுச் சங்கத்தின் சேர்மன்.’ என்று தன்னை ஓ.ராஜா குறிப்பிட்டு, தேர்தலில் நின்றுள்ளார். ஆனால் உண்மையில் அப்படியொரு கிராமமே இல்லை. ஆமாங்க, ரோஸிநகர் எனும் கிராமமே தேனி மாவட்ட வருவாய் கிராம லிஸ்டில் இல்லை. AIADMK deputy cm  Panneerselvam's Brother O Raja Background

தன் அண்ணன் இந்த மாநிலத்துக்கே துணை முதல்வர் எனும் தைரியத்தில் தன் மகளான ரோஸி பெயரில், இல்லாத கிராமத்தை போலியாக உருவாக்கியுள்ளார். அரசு அதிகாரிகளும் இதற்கு உடன் நின்றுள்ளனர். மிகப்பெரிய மோசடியை நடத்தி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.” என்றிருக்கிறார். இந்த தகவலை அப்படியே கேட்ச் செய்திருக்கும் தேனி, மதுரை மாவட்ட தி.மு.க.வினர், ‘பன்னீர்செல்வம் தன் துறையின் மூலம் அப்ரூவல் இல்லாத மனைகளுக்கு அப்ரூவல் கொடுக்கும் பணிக்காக கோடி கோடியாய் கொள்ளையடித்து கொட்டுகிறார். அவரது மகன் ரவீந்திரநாத்தோ சட்டப்புறம்பாக ஆற்றில் மணல் அள்ளி சம்பாதிக்கிறார். ஆனால் தம்பியோ, போலியாக கிராமத்தையே உருவாக்கி, ஆவின் சேர்மனாகிவிட்டார். என்ன ஒரு சாதனை குடும்பம்! இதுதான் நிஜ தர்மயுத்தம்.” என்று கிழி கிழியென கிழிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios