Asianet News TamilAsianet News Tamil

நோட்டா கூட கூட்டணி போட்டாலே ஜெயிக்கலாம்... ஆன அந்த கட்சியோட வேண்டாம்... தெறித்து ஓடும் அதிமுகவினர்!

பாஜகவா வேண்டவே வேண்டாம் என அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தெறித்து ஓடுகின்றனர். மேலும் தனித்து நின்று எந்த தேர்தலையும் சந்திப்போம் என அதிமுக எம்எல்ஏ செல்லப்பா, செய்தியாளர்களிடம் கூறினார். 

AIADMK coalition BJP...MLA rajan chellappa
Author
Tamil Nadu, First Published Dec 14, 2018, 11:11 AM IST

பாஜகவா வேண்டவே வேண்டாம் என அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தெறித்து ஓடுகின்றனர். மேலும் தனித்து நின்று எந்த தேர்தலையும் சந்திப்போம் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, செய்தியாளர்களிடம் கூறினார். AIADMK coalition BJP...MLA rajan chellappa

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;- அதிமுக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்கிறது. அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கம். இதில் தொண்டராக இருப்பது பெருமை. எம்ஜிஆரின் இரட்டை இலையை மறந்து வேறு கட்சிக்கு எந்த தொண்டனும் செல்ல மாட்டார்கள். ஆனால் எங்களிடம் பிரிந்து சென்ற சிலர் திமுகவில் சேரப்போவதாக தெரிகிறது. அதற்கு காரணம் அவர்கள் ஏற்றுள்ள தலைமையின் சுய நலமும் தான். AIADMK coalition BJP...MLA rajan chellappa

மதுரையை பொறுத்த வரை அதிமுக. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் பணி செய்கிறார்கள். 

கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண தொகை மத்திய அரசு உடனே அறிவிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாடு என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது. மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இதே நிலைதான். எனவே தான் நாங்கள்  ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என பாடுபட்டோம். அந்த முயற்சி நடக்காமலே போய்விட்டது. விரைவில் எம்பிக்கள் தேர்தல் வருகிறது. AIADMK coalition BJP...MLA rajan chellappa

அந்த தேர்தலில் அதிமுக, கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டுமென்று அவசியமில்லை. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிமுகவுக்கு அவசியமில்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கமான அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. எனவே தனித்து நின்று எந்த தேர்தலையும் சந்திப்போம். தெலுங்கானாவில் கூட சந்திரசேகரராவ் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவும் தனித்து நின்று போட்டியிடும். தேவைப்படும் பட்சத்தில் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அதிமுக மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios