திருச்சியில் வாகன சோதனையில் 1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம் முசிறி அதிமுக எம்எல்ஏவும், வேட்பாளருமான செல்வராசுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

திருச்சியில் வாகன சோதனையில் 1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம் முசிறி அதிமுக எம்எல்ஏவும், வேட்பாளருமான செல்வராசுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை சோதனைசாவடியில், தாசில்தார் ராஜசேகர் தலைமையிலான பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணியளவில், அதிமுக கொடியுடன் வந்த இன்னோவா காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்திய ராஜா, எம்.எல்.ஏ. செல்வராசு ஓட்டுநர் ஜெயசீலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட கார், முசிறி அதிமுக எம்எல்ஏ செல்வராஜூக்கு சொந்தமானது என்றும். அவரது அறிவுறுத்தலின்பேரில் பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. 

இதுவரை திருச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே சிறிய தொகையாக பிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் 500 ரூபாய் கட்டுகளாக பிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.