Asianet News TamilAsianet News Tamil

உடைகிறது அதிமுக கூட்டணி... வெளிப்படையாகவே வேட்டு வைத்த பாஜக... எடப்பாடி பேரதிர்ச்சி..!

அதிமுக ஆட்சியின் ஊழல்களையும், முறைகேடுகளையும் கிளப்பி பாஜக ஐடி விங் கருத்துக்களை பதிவிட இருப்பதால் இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 
 

AIADMK BJP's coalition collapses
Author
Tamil Nadu, First Published Oct 2, 2019, 3:49 PM IST

பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ். நரேந்திரன் ஆகியோர் மாநில அரசு குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஐடி பிரிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.  இதுவரை, ஆளும் அதிமுகவை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு கட்சி செயற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்தது. கடந்த மாதம் சென்னையில் பேனர் விழுந்து 23 வயதான  சுபஸ்ரீ மரணம் அடைந்ததில்  இருந்து  பாஜக ஐடி பிரிவு தனது  கூட்டணி கட்சியான அதிமுகவை தாக்கி வருகிறது. தமிழக கட்சிகளால் கடைப்பிடிக்கப்படும் கட்-அவுட் கலாச்சாரத்திற்கு எதிராக பெரிதும் பேசியது. AIADMK BJP's coalition collapses

கடந்த 10 நாட்களில், பாஜக மாநில பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தமிழக அரசின் மோசடிகளையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டத் தொடங்கி உள்ளது. "தமிழக அரசின் தவறுகளை விமர்சிக்கவும், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தவும் எங்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக லோக் ஆயுக்தாவை செயலில் ஈடுபடுத்தவும் நாங்கள் பிரசாரம் செய்ய இருக்கிறோம்” என ஐடி விங் பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். AIADMK BJP's coalition collapses

தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கமான  @BJP4TamilNadu கோயம்புத்தூரில் சட்டவிரோத மணல் சுரங்கத்தைப் பற்றிய பதிவுகளை மறு ட்வீட் செய்து, சட்டவிரோத மணல் சுரங்கத்திற்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவை மாநில அரசு ஏன் பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தது. மணல் மாஃபியாவை செயல்பட அரசாங்கம் ஏன் அனுமதிக்கிறது என்று கேள்வி எழுப்பியதோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகங்களை பற்றியும் பதிவிடப்பட்டு இருந்தது. AIADMK BJP's coalition collapses

"நாங்கள் சமூக ஊடகங்களில் தமிழக அரசின் தவறான செயல்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல், ஊழலை சரிபார்க்க லோக் ஆயுக்தாவை பயன்படுத்த மக்களுக்கு எடுத்து கூறி வருகிறோம் " என்று ஆர்.நிர்மல்  குமார் கூறியுள்ளார். பல விவகாரங்களை பாஜக ஐடி விங் கிளறி இருப்பதால் அதிமுகவுடனான கூட்டணி நீடிக்குமா? பாஜக கூட்டணி மாறுகிறதா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  பாஜக இப்படி திடீர் முடிவெடுத்து செயல்படுவதால் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios