அதிமுகவினருக்கு எதிராக களமிறங்கும் ரசிகர்கள்..! அமைதியாக இருந்து உசுப்பேற்றும் விஜய்..!
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வெளிப்படையாகவே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வெளிப்படையாகவே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அரசியல் நிலைப்பாடு எடுத்திருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கோவைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு என்பதை மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இதனைப் புரிந்துகொண்டு நடிகர் விஜய்யின் ரசிகர்களும் கடந்த முறை பாஜக கூட்டணிக்கு வாக்களித்தனர்.
ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகர் விஜய் எவ்வித அரசியல் நிலைப்பாடும் எடுக்கவில்லை. தற்போதைய நாடாளுமன்ற தேர்தலின் போதும் விஜய் அரசியல் குறித்து எதுவும் பேசாமல் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஆனால் அவரது ரசிகர்களும் ஆங்காங்கே அதிமுக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மதுரை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனை சந்தித்த விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் ஆதரவு தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரித்தபோது வெங்கடேசனின் நண்பர் என்ற முறையில் தான் ஆதரவு தெரிவித்ததாக விஜய் ரசிகர் மன்ற தலைவர் கூறினார். ஆனால் உண்மை வேறு. சர்க்கார் திரைப்படம் வெளியானபோது நடிகர் விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் அதிமுகவினர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதன் பின்னணியில் தற்போதைய மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளருமான ராஜ் சத்யன் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதற்கு பதிலடியாகவே விஜய் ரசிகர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதேபோல் அரக்கோணம் தொகுதியில் விஜய் ரசிகர்கள் திடீரென திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து களத்தில் இறங்கியுள்ளனர்.
ரசிகர்கள் வெளிப்படையாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நடிகர் விஜயும் சரி அவரது மக்கள் இயக்கத் தலைமையின் சரி அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. இதற்கு காரணம் நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாடு அதிமுகவிற்கு எதிரான தான் என்கிறார்கள். அதனால்தான் ரசிகர்களை வேலை பார்த்த விட்டுவிட்டு விஜய் வேடிக்கை பார்த்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்.