அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தாமே ஆட்சி அமைப்போம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் இடைத்தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகளில் வெற்றி பெறாமல் ஆகிய காரணங்கள் குறித்து விவாதிக்க அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அழைத்துச் சென்றிருந்தது. துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் தனது வீட்டிற்கு வருமாறு எடப்பாடி தரப்பிலிருந்து அவசர செய்தி அனுப்பப்பட்டிருந்தது. மேலும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு நேரமும் கொடுக்கப்பட்டிருந்தது. 

அதன்படி காலை 10 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதேபோல் முதலில் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக கேட்டு வந்த காரணத்தை தன்னுடைய உதவியாளர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி குறித்து வைத்துக்கொண்டார். இதேபோல் நேற்று திமுக படுதோல்வியை சந்தித்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் ஒவ்வொருவராக சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

முழுக்க முழுக்க நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை பணிகள் மட்டுமே இருந்த எடப்பாடி மற்ற பணிகள் எதையும் நேற்று செய்யவில்லை. தலைமைச் செயலகத்திற்கு கூட எடப்பாடி நேற்று புறப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் முதலமைச்சரை சந்திக்க ஏற்கனவே நேரம் பெற்று வைத்திருந்தார் பலரையும் இன்று சந்திக்க முடியாது என்று திருப்பி அனுப்பி இருந்தனர். உணவு இடைவேளை ஒரு இருபது நிமிடம் தவிர காலை 10 மணி முதல் இரவு வரை தொடர்ந்து நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டே இருந்துள்ளார். 

இதனால்தான் அதிமுக நடத்திய இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கூட எடப்பாடி பங்கேற்கவில்லை. இந்த அளவிற்கு அனைத்தையும் ரத்து செய்துவிட்டு எடப்பாடி நிர்வாகிகளிடம் அப்படி என்ன பேசினார் என்று விசாரித்தபோது, பலரும் கூறியது ஒரே விஷயம் தான். சந்திப்பின் போதே எடப்பாடி அவ்வளவாக பேசவில்லை என்றும் நிர்வாகிகளை பேசவிட்டு அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்க மட்டுமே எடப்பாடி செய்ததாகச் சொல்கிறார்கள். 

ஆனால் அதிமுக என்பது தற்போது நாம் தான் என்று ஆகி விட்டதாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செய்த தவறுகளை சரி செய்து விட்டால் ஜெயலலிதா பாணியில் கூட்டணி கணக்கை சரியாக போட்டு மீண்டும் அதிமுக அரியணை ஏறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று மிகவும் உறுதியாக தங்களிடம் எடப்பாடி கூறியதாக நிர்வாகிகள் சொல்கின்றனர். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் முறையாக வேலை செய்ய அவர்கள் கொடுத்த பணத்தை முதியவர்கள் என அனைவரையும் லிஸ்ட் போட்டு வைத்துள்ளதாகவும் ஜெயலலிதா பணிகள் விரைவில் நடவடிக்கை பொறுத்திருந்து பாருங்கள் என்று வெளிப்படையாகவே எடப்பாடி கூறியதாகவும் கூறிவிட்டு சென்றனர்.