Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் பணிக்குழு அமைத்து அதிமுக அதிரடி சரவெடி.. செம்மலை, செல்லூர் ராஜூவுக்கு முக்கியத்துவம்.

மேலே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் புதுச்சேரி மாநிலம் கிழக்கு புதுச்சேரி மாநிலம் மேற்கு மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் இணைந்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

AIADMK action set up election task force .. Semmalai, Sellur Raju importance.
Author
Chennai, First Published Sep 25, 2021, 11:48 AM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளாட்சித் தேர்தல் 2021 க்கான, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-  புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் வருகிற 21-10-2021 25-10-2021 , 28-10-2021 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை, தெரிவு செய்வதற்காகவும், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட, கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகள்  போட்டியிடும் இடங்களை தெரிவு செய்வதற்காகவும், கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக புதுச்சேரி மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கீழ்க் கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

AIADMK action set up election task force .. Semmalai, Sellur Raju importance.

1.திரு.செ.செம்மலை அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், 

2. திரு .செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ அவர்கள் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்.

3.  திரு.எம். சி சம்பத் அவர்கள், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

4. A.அன்பழகன் Ex MLA அவர்கள், புதுச்சேரி மாநில கிழக்கு கழகச் செயலாளர்

5. ஓம்சக்தி சேகர் Ex MLA அவர்கள் புதுச்சேரி மாநிலம் மேற்கு கழக செயலாளர்

6. திரு. வி ஓமலிங்கம் அவர்கள், காரைக்கால் மாவட்ட கழக செயலாளர்.  

AIADMK action set up election task force .. Semmalai, Sellur Raju importance.

மேலே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் புதுச்சேரி மாநிலம் கிழக்கு புதுச்சேரி மாநிலம் மேற்கு மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் இணைந்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios