ஆதரவுக்கரம் நீட்டிய அதிமுக..! நெகிழ்ந்து போன கூட்டணி கட்சி வேட்பாளர்கள்..!
கடைசி நேரத்தில் அதிமுக தரப்பில் இருந்து கிடைத்த வலுவான ஆதரவால் பாமக தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடைசி நேரத்தில் அதிமுக தரப்பில் இருந்து கிடைத்த வலுவான ஆதரவால் பாமக தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி சமயத்திலேயே தேர்தல் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தான் தேமுதிக மற்றும் பாமக அதிமுக வுடன் இணைந்து. அந்த நிபந்தனையை ஏற்று தேமுதிக மற்றும் பாமகவிற்கு தொகுதிகளை அதிமுக பிரித்துக் கொடுத்தது. வாக்குறுதி தவறாத வகையில் பாமக மற்றும் தேமுதிக வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை முடிந்த அளவிற்கு அதிமுக தரப்பே கவனித்து வந்தது.
அதிலும் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஒரு படி மேலே சென்று அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை வேறு வேறு எனப் பிரித்துப் பார்க்காமல் தங்கள் கட்சியின் வேட்பாளர் என்கிற ரீதியில்தான் தேர்தல் பணியாற்றினர். இதனால் அதிமுக மீது தேமுதிகதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களுக்கு இனம் புரியாத ஒரு நட்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடைசி கட்ட பணிக்கு தேவைப்படும் பணம் நிச்சயமாக அதிமுக தரப்பிலிருந்து கிடைக்காது என்று பாமக மற்றும் தேமுதிக தரப்பு கருதிக் கொண்டு இருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலமாக கடைசி கட்ட செலவுகளையும் அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது. இப்படி ஒரு உதவிக்கரம் கிடைக்கும் என்று எதிர்பாராமல் இருந்த தேமுதிகதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் உற்சாகத்துடன் கடைசி கட்ட பணிகளில் இறங்கியுள்ளனர்.
ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி தயவு தேவை என்பதால் தான் கடைசி நேரத்தில் அதிமுக இப்படி உதவிக்கரம் நீட்டி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.