ஆளுங்கட்சி ரெண்டாயிரம் கொடுக்குது...! தினகரன் குக்கர் கொடுக்கிறாரு... நாம வெறுங்கைய வீசிட்டு போனா விரட்டுறாங்க தளபதி..!

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டாவை சேர்ந்த சில நாடாளுமன்ற தொகுதிகளில் தினகரன் கட்சியினர் ‘இலவச குக்கர்’களை விநியோகித்துக் கொண்டிருப்பதாக போட்டோவுடன் தகவல் பரவியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து தி.மு.க.வின் தலைமைக்கு அக்கட்சி சில நெருக்கடிகளை கொடுக்க துவங்கியுள்ளனர். 

AIADMK 2000...dinakaran cooker...DMK shock

கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிபாசீட்டை இழந்தது தி.மு.க. இதற்கு வெளிப்படையாக தெரியுமளவுக்கு தி.மு.க. சொன்ன ரகசிய பதில்...’ஆளுங்கட்சியும், தினகரனும் பணம் கொடுத்தாங்க. ஆனால் நாங்க அஞ்சு பைசா கூட தரலை. ஓட்டுக்கு துட்டு கொடுக்கலேன்னா மக்கள் என்ன பண்றாங்க?ன்னு பார்க்கிற ஒரு பரிசோதனை முயற்சியா ஆர்.கே.நகரை பயன்படுத்தினோம்.’ என்பதுதான். 

இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் ‘ஓட்டுக்கு நாம பணம் கொடுக்கலேன்னா, ஆர்.கே.நகர் ரிசல்ட்தான் 40 தொகுதியிலும்.’ என்று ஸ்டாலினிடம் வெளிப்படையாகவே சில மாநில நிர்வாகிகள் உடைத்துப் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யோசித்த ஸ்டாலின், நன்கு செலவு செய்யும் திறனுடைய பணபலம் படைத்த நபர்களையே வேட்பாளராக்கிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் ‘வாக்காளர்களை குளிரவைக்க தளபதி முடிவெடுத்துவிட்டார்.’ என்று குதூகலிக்கிறார்கள். AIADMK 2000...dinakaran cooker...DMK shock

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று  நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டாவை சேர்ந்த சில நாடாளுமன்ற தொகுதிகளில் தினகரன் கட்சியினர் ‘இலவச குக்கர்’களை விநியோகித்துக் கொண்டிருப்பதாக போட்டோவுடன் தகவல் பரவியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து தி.மு.க.வின் தலைமைக்கு அக்கட்சி சில நெருக்கடிகளை கொடுக்க துவங்கியுள்ளனர். அதில் “தேர்தல் நெருங்கிட்டதாலே ‘அன்பளிப்பு’ மூடுக்கு வாக்காளர்கள் வந்துட்டாங்க. தினகரன் கட்சிக்காரங்க நைஸ் நைஸா வீட்டுக்கு வீடு குக்கர் விநியோகிக்க ஆரம்பிச்சுட்டாங்க. AIADMK 2000...dinakaran cooker...DMK shock

ஆளுங்கட்சியோ அதிகாரப்பூர்வமாகவே ரெண்டாயிரம் ரூபாயை அக்கவுண்டுல போட்டுவிடுது. சில இடங்களில் அந்தந்த வார்டு நிர்வாகிங்க, மக்களோட பூத் வாக்காளர்களின் வங்கி கணக்குகளை வாங்கி ஐநூறு, ஆயிரம்னு பணம் போட்டு விடுறதாகவும் தகவல் வருது. ரெண்டு தரப்பும் வேட்பாளரை அறிவிக்கிறதுக்கு முன்னாடியே இப்படி இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த கட்சிக்காரங்க ஏரியாவுக்குள்ளே போனாலே மக்கள் அன்பாவும், மரியாதையாவும் வரவேற்கிறாங்க. ஆனா நம்ம கட்சி அல்லது நம்ம கூட்டணி கட்சிகளை பார்த்தா நக்கலா சிரிச்சுட்டு, ‘என்ன, செலவு பண்ற மனசில்லையா?’ன்னு வெளிப்படையாவே கேட்கிறாங்க. AIADMK 2000...dinakaran cooker...DMK shock

 அதனால சட்டுபுட்டுன்னு அவங்களை கவனிக்கிற வேலையை ஆரம்பிக்கணும். இல்லேன்னா துவக்கத்துல இருந்தே சரிவை சந்திக்க வேண்டியதாகிடும். அதனால மாவட்ட செயலாளர்களை பணத்தை ரிலீஸ் பண்ண தலைமை உத்தரவிடணும்.’ என்று கோரியிருக்கிறார்களாம். தலைமையும் இதைப்பற்றி யோசிக்க துவங்கியுள்ளதாம். AIADMK 2000...dinakaran cooker...DMK shock

அதேநேரத்தில் ‘இதையெல்லாம் கண்டுக்காதீங்க தளபதி. நம்மாளுங்களுக்கு தேர்தல் வந்துட்டாலே தினமும் ஆயிரம், ஐநூறுன்னு கைக்கு வந்து சேரணும்னு ஆசை. அதைத்தான் மக்களோட தலையில ஏத்தி சொல்றாங்க. அதனால நிதானமா யோசிப்போம்.’ அப்படின்னு கட்டையை போட்டுள்ளார்களாம் மாவட்ட செயலாளர்கள். இதெப்டியிருக்கு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios