Asianet News TamilAsianet News Tamil

பா.ம.க.வுடன் மீண்டும் கூட்டணி: திருமா கொடுக்கும் ‘அட்வான்ஸ்டு விளக்கம்’

*    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வென்று, ஆட்சி அமைத்தாலும் சரி அல்லது அது நடக்காமல் எதிர்கட்சிகள் வரிசையில் அமர்ந்தாலும் சரி, காங்கிரஸுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்: குமாரசாமி. 
 

again thiruma valavan join with pmk
Author
Chennai, First Published May 19, 2019, 4:26 PM IST

*    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வென்று, ஆட்சி அமைத்தாலும் சரி அல்லது அது நடக்காமல் எதிர்கட்சிகள் வரிசையில் அமர்ந்தாலும் சரி, காங்கிரஸுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்: குமாரசாமி. 
(ஏம்ணே இப்படி சாஷ்டாங்கமா கால்ல விழுந்துட்டீங்க, எங்கடா கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா கோஷ்டி பிடுங்கிவிட்டுடுமோன்னு பயமா?)

*    தமிழகத்தில் உள்ள மலைகளை பாதுகாக்க தனி சட்டம்  உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது இயற்கை செல்வங்கள் அழியாமல் பாதுகாக்கப்படும். நீங்கள் அதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும்! எனும் கோரிக்கையை தமிழக கவர்னர் பன்வாரிலாலிடம் இயற்கை ஆர்வலர்கள் வழங்கினர்: செய்தி. 
(க்கும், சுப்ரீம்கோர்ட்டே விடுதலை பண்ண சொல்லிட்ட மனுஷங்களை வெளியிட விட சொல்லி ஒரு மனு இவரு டேபிள்ள பல மாசமா தூங்குது. இதுல மரத்தை?....ஆனாலும் உங்களுக்கெல்லாம் இம்புட்டு ஆசை ஆகாதுப்பா)

*    அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு உள்ளது என்ற துணைவேந்தர் சூரப்பாவின் குற்றச்சாட்டு மிக தவறானது: எடப்பாடி பழனிசாமி. 
(அப்படி சொல்லுங்கண்ணே, உண்மையை உரக்க. நாம தெருவிளக்கு பிரச்னையில துவங்கி ஹைட்ரோ கார்பன் வரைக்கும் எதுலேயுமே தலையிடுறதுமில்லை, கண்டுக்கிறதுமில்லை. இதுல பல்கலை விவகாரத்துல போயி...ஹய்யோ ஹய்யோ)

*    எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, ஒழுங்காக செயல்படவில்லை என புகார் வந்தால், அவர்களை ராஜினாமா செய்ய வைப்போம்: கமல்ஹாசன். 
(எப்படிங்க தல? உங்களை ஹீரோவாக்கி கோடி கோடியா பணம் போட்ட தயாரிப்பாளர், படம் ஓடாம செம்ம நஷ்டமானாலும் கூட கடைசி அஞ்சு பைசா வரைக்கும் வக்கனையா வசூல் பண்ணிட்டு, வணக்கம் வைப்பீங்களே அது மாதிரியா?)

*    காங்கிரஸுடன் எங்களுக்கு நிறையவே முரண்பாடுகள் உண்டு. ஆனாலும், மதவாத பி.ஜே.பி.யை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்படுத்தும் திறன் அக்கட்சிக்கு இருப்பதால், கூட்டணி சேர்ந்து நிற்கிறோம்: திருமா வளவன்.
(இதே வாய், நாளைக்கு பா.ம.க.வோடு ஒரு கூட்டணி வெச்சு, இப்படி நியாயப்படுத்தி பேசினாலும் கூட நாங்க தப்பா நினைக்கவே கூடாது அப்படித்தானே தல?ஓகே ஓகே!)

Follow Us:
Download App:
  • android
  • ios