மீண்டும் மோடி அலை..! 83 % ஆதரவு அவருக்கே..! 

ஆங்கில நாளிதழ் ஒன்று 2 லட்சம் பேரிடம் ஆன்லைனில் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி உள்ளதாக வெளியிட்டு உள்ளது.

பிப்ரவரி 11 முதல் 20 ஆம் தேதி வரை, ஆன்லைனில் 2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மத்தியில் சிறந்த ஆட்சியை கொடுத்தது யார் என்ற கேள்விக்கு 83 சதவீதம் பேர் மோடிக்கே ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இந்த கேள்வியின் கீழ், மோடி அரசின் செயல்பாடுகள் சிறப்பானவை அல்லது மிகவும் சிறப்பானவை என பாணியில் ஆதரவு தெரிவித்து உள்ளனர்

மோடி ஆட்சியில் ஏழை மக்களை சென்றடைய கூடிய பல நலத்திட்ட உதவிகளை மோடி ஆட்சி மக்களிடையே கொண்டு சென்று உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவித்து உள்ளனர்.


 
மோடிக்கு அடுத்த படியாக ராகுலுக்கு 8.33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 1.44 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 0.43 சதவீதம் பேரும் ஆதரவும், மற்ற தலைவர்களுக்கு 5.9 சதவீதம் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 

அதே போன்று, கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தற்போது வரையில் ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு உள்ளது. அதன் படி, 31 சதவீத அதிகரித்து உள்ளது என்றும் 63 சதவீத மக்கள் அதிகரிக்கவில்லை என்றும் கருத்தை பதிவு செய்து உள்ளனர் 

மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சிக்கு 3.47 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது தவிர கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சி மிகவும் நன்று என 59.51 சதவீதம் பேரும், நன்று என 22.29 சதவீதம் பேரும், பரவாயில்லை என 8.25 சதவீதம் பேரும், மோசம் என்று 9.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா முழுக்க வீசிய மோடி அலையில் தற்போது தொய்வு இருந்தாலும், மீண்டும் ஆட்சியை பிடிக்க மோடிக்கே பெரும்பான்மையான ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மோடி ஆட்சி குறித்து எதிர்க்கட்சி வைக்க கூடிய மிகமுக்கிய  குற்றச்சாட்டாக வேலையில்லா திண்டாட்டம் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கும் வழிவகை  ஏற்படுத்தி கொடுக்க பல்வேறு திட்டங்களை மத்தியில் ஆளும் பாஜக வகுக்க திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.